
தீ விபத்துக்கு காரணம் தரமற்ற உதிரி பாகங்கள்தான்; ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், குறிப்பாக ஓலா எஸ்1 ப்ரோ, சனிக்கிழமையன்று (அக்டோபர் 28) பிம்ப்ரியில் உள்ள டிஒய் பாட்டீல் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஸ்கூட்டரில் தரமில்லாத வெளியே கிடைக்கும் பாகங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ பிடித்ததாக நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.
இது குறித்து ஓலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்கூட்டரில் பேட்டரி அப்படியே உள்ளது. ஆனால், வெளியில் வாங்கப்பட்ட உதிரிபாகங்கள் ஷார்ட் சர்க்யூட்டிற்கு வழிவகுத்ததாக எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எங்கள் வாடிக்கையாளர்களை அனைத்து சேவைத் தேவைகளுக்கும் உண்மையான உதிரிபாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் உதவிக்கு ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள ஓலா மையத்தின் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தீ விபத்து குறித்து ஓலா அறிக்கை
Important update pic.twitter.com/K7pw71Xoxo
— Ola Electric (@OlaElectric) October 29, 2023