LOADING...
ரியல் எஸ்டேட்டில் 'விமான' வேகம்! 5 ஆண்டுகளில் 50 புதிய ஏர்போர்ட்கள் வரப்போகுது
தற்போது இந்தியாவில் 165 செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன

ரியல் எஸ்டேட்டில் 'விமான' வேகம்! 5 ஆண்டுகளில் 50 புதிய ஏர்போர்ட்கள் வரப்போகுது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2026
06:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறைக்கு விமான நிலையங்கள் ஒரு முக்கிய அச்சாணியாக விளங்கும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் 165 செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு 33 நாட்களுக்கும் ஒரு புதிய விமான நிலையம் அல்லது முனையம் (Terminal) கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் துறை அமைப்பான நரேட்கோ ஏற்பாடு செய்த தேசிய நகர்ப்புற மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு மாநாடு 2026 இல் அவர் பேசினார். இது பற்றி மேலும் விரிவாக:

தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் மதிப்பு வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் $1 டிரில்லியன் டாலராகவும், 2047-ஆம் ஆண்டிற்குள் $5-7 டிரில்லியன் டாலராகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு அருகே கட்டப்படும் கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் குறித்த பிரச்சனைகளைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புடன் (ICAO) இணைந்து நாடு தழுவிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புடன் சமரசம் செய்யாமல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். வெறும் சொத்துக்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையில் ரியல் எஸ்டேட் திட்டங்கள் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Advertisement