LOADING...
தங்கம் விலை தாறுமாறு சரிவு; இன்றைய (அக்டோபர் 10) விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை தாறுமாறு சரிவு; இன்றைய (அக்டோபர் 10) விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2025
10:55 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக் கிழமை (அக்டோபர் 10) கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெள்ளிக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹165 குறைந்து ₹11,260 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,320 குறைந்து ₹90,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹180 குறைந்து ₹12,284 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,440 குறைந்து, ₹98,272 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை அதிகரிப்பு

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹125 குறைந்து ₹9,330 ஆகவும், ஒரு சவரன் ₹1,000 குறைந்து ₹74,640 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை வெள்ளிக் கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வெள்ளிக் கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹3 அதிகரித்து ₹180 ஆகவும், ஒரு கிலோ ₹1,80,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கம் மற்றும் வெள்ளியில் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement