
₹80,000 கடந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இன்றைய (செப்டம்பர் 6) விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (செப்டம்பர் 6) மீண்டும் உயர்வைச் சந்தித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹140 அதிகரித்து ₹10,005 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,120 உயர்ந்து ₹80,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹153 அதிகரித்து ₹10,914 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,224 அதிகரித்து, ₹87,312 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை உயர்வு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹115 உயர்ந்து ₹8,285 ஆகவும், ஒரு சவரன் ₹920 அதிகரித்து ₹66,280 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் சனிக்கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹2 அதிகரித்து ₹138 ஆகவும், ஒரு கிலோ ₹1,38,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.