
சவரனுக்கு ₹400 சரிவு; இன்றைய (செப்டம்பர் 18) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (செப்டம்பர் 18) சரிவைச் சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹50 குறைந்து ₹10,220 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹400 குறைந்து ₹81,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹55 குறைந்து ₹11,149 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹440 குறைந்து ₹89,192 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹40 குறைந்து ₹8,470 ஆகவும், ஒரு சவரன் ₹320 குறைந்து ₹67,760 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் வியாழக்கிழமை குறைந்துள்ளது. வெள்ளி விலை வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹1 குறைந்து ₹141 ஆகவும், ஒரு கிலோ ₹1,43,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.