
மீண்டும் மீண்டுமா! ஒரே நாளில் ₹680 உயர்வு; இன்றைய (செப்டம்பர் 1) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (செப்டம்பர் 1) மீண்டும் கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹85 அதிகரித்து ₹9,705 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹680 அதிகரித்து ₹77,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹93 அதிகரித்து ₹10,588 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹744 அதிகரித்து, ₹84,704 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி
வெள்ளி விலையும் உயர்வு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹75 அதிகரித்து ₹8,030 ஆகவும், ஒரு சவரன் ₹600 அதிகரித்து ₹64,240 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் திங்கட்கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை திங்கட்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹2 அதிகரித்து ₹136 ஆகவும், ஒரு கிலோ ₹1,36,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.