
தங்கம் விலை மீண்டும் தாறுமாறு உயர்வு; இன்றைய (அக்டோபர் 21) விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) கடும் உயர்வை சந்தித்துள்ளது. செவ்வாய் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹260 அதிகரித்து ₹12,180 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹2,080 அதிகரித்து ₹97,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹284 அதிகரித்து ₹13,288 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹2,272 அதிகரித்து, ₹1,06,304 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹210 அதிகரித்து ₹10,060 ஆகவும், ஒரு சவரன் ₹1,680 அதிகரித்து ₹80,480 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை செவ்வாய் கிழமை சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலை செவ்வாய் கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹2 குறைந்து ₹188 ஆகவும், ஒரு கிலோ ₹1,88,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இந்நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையற்ற தன்மையிலேயே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.