Page Loader
கிராமுக்கு ₹55 சரிவு; இன்றைய (ஜூலை 4) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 
இன்றைய (ஜூலை 4) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு ₹55 சரிவு; இன்றைய (ஜூலை 4) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

எழுதியவர் Sekar Chinnappan
Jul 04, 2025
11:13 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக் கிழமை (ஜூலை 4) சரிவை சந்தித்துள்ளது. வெள்ளிக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹55 சரிந்து ₹9,050 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹440 குறைந்து ₹72,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹60 குறைந்து ₹9,873 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹480 குறைந்து, ₹78,984 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை 

வெள்ளி விலையும் சரிவு

இதற்கிடையே, 18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹45 குறைந்து ₹7,470 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹360 குறைந்து ₹59,760 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலை வெள்ளிக் கிழமை நிலவரப்படி ஒரு கிராமுக்கு ₹1 குறைந்து ₹120 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹1000 குறைந்து ₹1,20,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.