
ஒரே நாளில் ₹320 சரிவு; இன்றைய (ஜூலை 31) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக்கிழமை (ஜூலை 31) விலை சரிவை சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹40 சரிந்து ₹9,170 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹320 சரிந்து ₹73,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹45 சரிந்து ₹10,003 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹360 சரிந்து, ₹80,024 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹30 சரிந்து ₹7,565 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹240 சரிந்து ₹60,520 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலை வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிராமுக்கு ₹2 சரிந்து ₹125 ஆகவும், ஒரு கிலோ ₹1,25,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.