
கிராமுக்கு ரூ.40 உயர்வு; இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 3) உயர்வை சந்தித்துள்ளது. வியாழக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹40 அதிகரித்து ₹9,105 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹320 அதிகரித்து ₹72,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹44 அதிகரித்து ₹9,933 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹352 அதிகரித்து, ₹79,464 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் உயர்வு
இதற்கிடையே, 18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹35 அதிகரித்து ₹7,515 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹280 அதிகரித்து ₹60,120 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வியாழக் கிழமை நிலவரப்படி ஒரு கிராமுக்கு ₹1 அதிகரித்து ₹121 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹1000 அதிகரித்து ₹1,21,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.