
மீண்டும் ₹400 சரிவு; இன்றைய (ஜூலை 26) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சில தினங்களுக்கு முன்பு கடும் உயர்வை சந்தித்து, பின்னர் கடுமையான வீழ்ச்சியை அடுத்தடுத்த நாட்களில் பெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை (ஜூலை 25), சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹50 சரிந்து ₹9,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹400 சரிந்து ₹73,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹55 சரிந்து ₹9,993 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹440 சரிந்து, ₹79,944 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹40 சரிந்து ₹7,550 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹320 சரிந்து ₹60,400 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை சனிக்கிழமை ஒரு கிராமுக்கு ₹2 சரிந்து ₹126 ஆகவும், ஒரு கிலோ ₹1,26,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.