
மீண்டும் ₹360 சரிவு; இன்றைய (ஜூலை 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக்கிழமையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் (ஜூலை 25) கடுமையான சரிவை சந்தித்துள்ளது. வெள்ளிக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹45 சரிந்து ₹9,210 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹360 சரிந்து ₹73,680 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹49 சரிந்து ₹10,048 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹392 சரிந்து, ₹80,384 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹35 சரிந்து ₹7,590 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹280 சரிந்து ₹60,720 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது. இதன்படி வெள்ளி விலை வியாழக்கிழமை இருந்த விலைப்படி ஒரு கிராம் ₹128 ஆகவும், ஒரு கிலோ ₹1,28,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.