
ஒரே நாளில் ₹1000 சரிவு; இன்றைய (ஜூலை 24) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 24) கடுமையான சரிவை சந்தித்துள்ளது. வியாழக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹125 சரிந்து ₹9,255 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1000 சரிந்து ₹74,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹136 சரிந்து ₹10,097 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1088 சரிந்து, ₹80,776 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹105 சரிந்து ₹7,625 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹840 சரிந்து ₹61,000 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிராமூக்கு ₹1 சரிந்து ₹127 ஆகவும், ஒரு கிலோ ₹1,27,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.