
கிராமுக்கு ₹10 அதிகரிப்பு; இன்றைய (ஜூலை 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஜூலை 21) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹10 அதிகரித்து ₹9,180 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹80 அதிகரித்து ₹73,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹11 அதிகரித்து ₹10,015 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹88 அதிகரித்து, ₹80,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹5 அதிகரித்து ₹7,560 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹40 அதிகரித்து ₹60,480 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் முந்தைய நாளின் விலையிலேயே நீடிக்கிறது. இதன்படி வெள்ளி விலை திங்கட்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹126 ஆகவும், ஒரு கிலோ ₹1,26,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.