
ஒரே நாளில் ₹1200 உயர்வு; ஷாக் கொடுத்த தங்கம் விலை; இன்றைய (ஆகஸ்ட் 30) விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹150 அதிகரித்து ₹9,620 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,200 அதிகரித்து ₹76,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹164 அதிகரித்து ₹10,495 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,312 அதிகரித்து, ₹83,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை உயர்வு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹125 அதிகரித்து ₹7,955 ஆகவும், ஒரு சவரன் ₹1,000 அதிகரித்து ₹63,640 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் சனிக்கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹1.10 அதிகரித்து ₹131 ஆகவும், ஒரு கிலோ ₹1,31,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.