LOADING...
₹120 உயர்வு; இன்றைய (ஆகஸ்ட் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 
இன்றைய (ஆகஸ்ட் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

₹120 உயர்வு; இன்றைய (ஆகஸ்ட் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2025
10:40 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) உயர்வைச் சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹15 அதிகரித்து ₹9,405 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹120 அதிகரித்து ₹75,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹16 அதிகரித்து ₹10,260 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹128 அதிகரித்து, ₹82,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை 

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹5 அதிகரித்து ₹7,775 ஆகவும், ஒரு சவரன் ₹40 அதிகரித்து ₹62,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை வியாழக்கிழமை எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. வெள்ளி விலை வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹130 ஆகவும், ஒரு கிலோ ₹1,30,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.