R3 மற்றும் MT-03 மாடல்களை விரைவில் இந்தியாவில் வெளியிடவிருக்கும் யமஹா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எண்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக் செக்மெண்ட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய பைக்குகளின் வரவும், வாடிக்கையாளர்கள் அதற்குக் கொடுக்கும் வரவேற்புமே இதற்குக் காரணம்.
வெளிநாட்டு ப்ரீமியம் பைக் தயாரிப்பாளர்களும் இந்தியாவில் தங்களது புதிய குறைந்த விலை ப்ரீமியம் பைக்குகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்திய தொடங்கநிலை ப்ரீமியம் பைக் சந்தை தற்போது சூடுபிடித்திருக்கிறது.
முன்னர் இந்தியாவில் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகளை விற்பனை செய்து வந்த யமஹாவும், தற்போது பழைய பைக் மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
ஆம், முன்பு இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வந்த YZF-R3 மாடலை மீண்டும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறத. இந்தியாவில் பிஎஸ் 6 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட போது அந்த மாடலின் விற்பனையை நிறுத்தியது யமஹா.
யமஹா
எப்போது வெளியாகிறது R3?
புதிய YZR-R3 மாடலை வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிரு வருகிறது யமஹா.
இந்த முறை அறிமுகப்படுத்தவிருக்கும் மாடலில், 41hp பவர் மற்றும் 29.5Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 321சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது யமஹா. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸூடன், ஸ்லிப் அண்டு அசிஸ்ட் கிளட்சையும் பயன்படுத்தியிருக்கிறது யமஹா.
வரும் டிசம்பரில் இந்த YZF-R3 மாடலை மட்டுமல்லாமல், இதன் நேக்கட் வெர்ஷனான MT-03 மாடலையும் சேர்த்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது யமஹா.
YZF-R3யில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே இன்ஜின் மற்றும் கியர் செட்டப்பை MT-03 மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், R3-யைப் போல டெடிகேட்டட் டிரைவிங் பொசிஷனோடு இல்லாமல், நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது MT-03.