ஷாவ்மியின் புதிய 'SU7' எலெக்ட்ரிக் செடானில் கொண்டிருக்கும் வசதிகள்?
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் கடந்த சில ஆண்டுகளாக உருாக்கி வந்தது. அந்தப் புதிய காரின் டிசைனை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியும் இருந்தது. என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது ஷாவ்மியின் புதிய கார்? 'SU7' எனப் பெயரிடப்பட்டிருக்கும் தங்களது புதிய எலெக்ட்ரிக் காரை ஸ்டாண்டர்டு, ப்ரோ மற்றும் மேக்ஸ் என மூன்று வேரியன்ட்களாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இவற்றில் ஸ்டாண்டர்டு மற்றும் மேக்ஸ் மாடல்களின் தயாரிப்பு வடிவங்களானது சோதனை ஓட்டத்தின் போது ஸ்பைஷாட்களில் சிக்கியிருக்கிறது. எல்இடி விளக்குகள், LiDAR சென்சார் அர்ரே, 19 இன்ச் டிசனைர் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது ஷாவ்மியின் புதிய எலெக்ட்ரிக் செடான்.
ஷாவ்மி SU7 எலெக்ட்ரிக் செடான்:
இந்தப் புதிய செடானில் சிங்கிள் மோட்டார் கொண்ட ரியர் வீல் டிரைவ் செட்டப் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட ஆல் வீல் டிரைவ் செட்டப் என இரு வகையான காண்பிகரேஷன்களில் வழங்கவிருக்கிறது ஷாவ்மி. சிங்கிள் மோட்டார் கொண்ட செட்டப்பானது 295hp பவரையும், இரண்டு மோட்டார்கள் கொண்ட செட்டப்பானது 663hp பவரையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளுடன் கூடிய ADAS பாதுகாப்பு அம்சங்களைப் பெறவிருக்கிறது புதிய SU7. 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த SU7 எலெட்ரிக் செடானானது, இந்திய மதிப்பில் ரூ.36 லட்சம் விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.