செல்ஃப் ட்ரைவிங் கார் மட்டுமல்ல, இப்போது ரிமோட் கண்ட்ரோல் கார்-உம் வாடகைக்கு எடுக்கலாம்
ஜெர்மன் ஸ்டார்ட்-அப் வே உலகின் முதல் ரிமோட் டிரைவிங் வாடகை கார் சேவையை, லாஸ் வேகாஸில் தொடங்கியுள்ளது. இது ஒரு தனித்துவமான மற்றும் ஈக்கோ-ஃப்ரன்ட்லி அனுபவத்தை வழங்கும் புதிய வகையான கார் சேவையாகும். ஒரு காரை வாடகைக்கு எடுப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஆனால் அந்த கார்-ஐ ஒருவர் ஓட்டிவருவதற்கு பதிலாக, கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ஒருவரால் ரிமோட் மூலம் உங்கள் இல்லம் தேடி வந்தால் எப்படி இருக்கும்? நீங்கள் விரும்பும் இடத்திற்கு அந்த காரை ஒட்டி சென்றுவிட்டு, உங்கள் இலக்கை அடைந்ததும், அதே செயலியில் தெரிவித்தால் போதுமானது. மற்றொரு ரிமோட் டிரைவர் அந்த காரை பொறுப்பேற்று கொள்வார்.
செலவை குறைக்க, ரேடாருக்குப் பதிலாக கேமராக்களை பயன்படுத்தும் கார்கள்
வேயின் தொலைத்தொடர்பு சேவையானது, வெற்றிகரமான ஆரம்ப கட்ட சோதனைகளுக்கு பிறகு, தற்போது நெவாடா பல்கலைக்கழகம், லாஸ் வேகாஸ்(UNLV) மற்றும் நகரத்தில் உள்ள 'ஆர்ட்ஸ் டிஸ்ட்ரிக்ட்'ஐ சுற்றி இப்போது கிடைக்கிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் வான் டெர் ஓஹே கூறுகையில், இந்த நிறுவனம், தனது வாகனங்களில் உள்ள கேமராக்களில் இருந்து கற்றுக்கொள்வது போல தன்னாட்சி அம்சங்களை படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான தன்னாட்சி வாகன உருவாக்குநர்கள் பயன்படுத்தும் LiDAR மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தை விட இவை மலிவானவை. வேயின் சேவையைப் பயன்படுத்துவதற்கான செலவு நிமிடத்திற்கு $0.30 மற்றும் ஷாப்பிங் பயணங்கள் போன்ற நிறுத்தங்களுக்கு நிமிடத்திற்கு $0.03 ஆகும். சந்தையில் உள்ள மாற்ற வாடகை கார்களை விட, இவர்களின் சேவை விலை குறைவே!