பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
இந்திய சந்தையில் பல எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சக்கைபோடு போடும் நிலையில், ஹீரோவின் V1 Pro விற்பனையை பிளிப்கார்ட் மூலம் கொண்டுவர உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கான முன்பதிவு தற்போது பெங்களூர் மற்றும் ஜெய்ப்பூர், டெல்லி நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதன் பின் இந்தியா முழுவதும் கிடைக்கும் எனக்கூறியுள்ளனர். மேலும், விடா வி1 மற்றும் விடா பிளஸ் ப்ரோ ஸ்கூட்டர்கள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர்களில் 3.44 கிலோவாட் பேட்டரி பவர் வழங்கப்பட்டுள்ளன.
ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - பிளிப்கார்ட் தளத்தில் பெற முடியும்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 143 கிலோமீட்டர் முதல் 165 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ்ஜை வழங்குகிறது. விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கழற்றக்கூடிய பேட்டரி அமைப்பை கொடுத்துள்ளனர். இரண்டு வேரியண்ட் ஸ்கூட்டர்களில் ப்ரோ வேரியண்ட் ஆனது விலை அதிகமாக இருப்பதோடு, நீண்ட தூர பயணம் மற்றும் அதிக வண்ணங்களிலும் கிடைக்கிறது. விடா வி1 மணிக்கு இந்த மாடல் 40 கிமீ வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் பெறுகிறது. அதுவே விடா ப்ரோ ஆனது மணிக்கு 40 கிமீ வேகம் 3.2 நொடிகளில் பெறுகிறது. இந்த விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது ஏத்தர் 450எக்ஸ், மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது.