
இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை கேடிஎம் 390 டியூக்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் புதிய அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை 390 டியூக் மாடலை வெளியிட்டிருக்கிறது கேடிஎம். டீசர், ப்ரோமோ போன்ற எந்த ஆர்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் இந்தப் புதிய அப்டேட்டட் மாடலை வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.
புதிய 390 டியூக்கில் இன்ஜின் உட்பட பல்வேறு விஷயங்களை மேம்படுத்தியிருக்கிறது கேடிஎம். முன்பக்கம் USD ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகளைப் பெற்றிருக்கிறது புதிய 390 டியூக்.
முந்தைய டியூக் மாடல்களில் சஸ்பென்ஷன் செட்டப்பை அட்ஜஸ்ட் செய்யும் வசதியை இந்திய மாடல்களில் கேடிஎம் கொடுக்கவில்லை. ஆனால் புதிய 390 டியூக்கில், முன்பக்கம் கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டு டேம்பிங், பின்பக்கம் ரீபவுண்டு மற்றும் ப்ரீலோடு அட்ஜஸ்டபிலிட்டி ஆகிய ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறது கேடிஎம்.
கேடிஎம்
மூன்றாம் தலைமுறை கேடிஎம் 390 டியூக்: இன்ஜின் மற்றும் விலை
அப்டேட் செய்யப்பட்ட 390 டியூக்கில் முந்தைய மாடலை விட பெரிய இன்ஜினைக் கொடுத்திருக்கிறது கேடிஎம். புதிய 399 சிசி இன்ஜினானது 45hp பவர் மற்றும் 39Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலை விட 1.5hp பவரும் மற்றும் 2Nm டார்க்கும் அதிகம்.
இந்த புதிய இன்ஜினை, புத்தம் புதிய அலுமினிய சப்-ஃபிரேமுடன் கூடிய 390 டியூக்கின் ட்ரெல்லிஸ் ஃபிரேமில் பொருத்தியிருக்கிறது கேடிஎம். இத்துடன் புதிய டேங்க் எக்ஸ்டனும் டிசைன் மாற்றமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ரெய்ன், ஸ்ட்ரீட் மற்றும் ட்ராக் என மூன்று ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கும் இந்தப் புதிய 390 டியூக்கை ரூ.3.11 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.
கேடிஎம்
மூன்றாம் தலைமுறை கேடிஎம் 250 டியூக்:
புதிய 390 டியூக்குடன், அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை 250 டியூக் மாடலையும் வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.
390 டியூக் மாடலில் கொடுக்கப்பட்ட ஸ்டைலிங் எலிமெண்டகளை 250 டியூக்கிலும் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், 250 டியூக்கின் இன்ஜினையும் ட்ரெல்லிஸ் ஃபிரேமிலேயே பொருத்தி மேம்படுத்தியிருக்கிறது கேடிஎம்.
ஆனால் 250 டியூக்கில், முந்தைய வெர்ஷனில் பயன்படுத்தப்பட்ட அதே 249சிசி இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்ஜின் மாற்றம் எதுவுமில்லை.
இந்தியாவில் புதிய அப்டேட் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை 250 டியூக்கை, கிட்டத்தட்ட அதே ரூ.2.39 லட்சம் (ரூ.779 மட்டும் கூடுதலான) விலையிலேயே வெளியிட்டிருக்கிறது கேடிஎம்.