இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்
சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்கு தயாராக உள்ளது. மாருதி சுஸுகி , சிட்ரயன், ஹோண்டா மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்களின் புதிய மாடல்கள் வரவிருப்பதே இதற்குக் காரணம். இந்த ஆண்டு முழுவதும் புதிய மாடல்களை வெளியிட, இந்த பிராண்டுகள் தயாராகி வருகின்றன. ஹோண்டா அமேஸ்: இந்த வரிசையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ், 2024இல் இந்திய சந்தையில் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவரவிருக்கும் ஹோண்டா அமேஸ், கணிசமான வெளிப்புற மற்றும் உட்புற மேம்பாடுகளை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுப்பிப்புகள் ஹோண்டா வழங்கும் அக்கார்ட் மற்றும் சிவிக் போன்ற சமீபத்திய உலகளாவிய செடான்களுடன் ஒத்துப்போகின்றன. புதுப்பிக்கப்பட்ட அமேஸ், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் விருப்பங்களை வழங்கும்.
அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்
ஸ்கோடா: ஸ்கோடா சூப்பர்ப் மாடலை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஸ்கோடா அதன் முந்தைய தலைமுறை சூப்பர்ப் மாடலை 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. லோக்கல் அசெம்பிளிக்கு மாற்றும் முன், சுபெர்ப் வகை முதலில் முழுமையாக இறக்குமதி செய்யப்படலாம். கூடுதலாக, ஸ்கோடா தனது புதிய தலைமுறை ஆக்டேவியா மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது. சிட்ரோயன்: அதன் நடுத்தர அளவிலான கூபே செடான் C3X ஐ, ஜூன்-ஜூலை 2024இல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. C3X, இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் போன்ற மாடல்களுடன் போட்டியிடும். மாருதி சுஸுகி: புத்தம்புதிய ஸ்விஃப்ட் அடுத்த இரண்டு மாதங்களில் உள்நாட்டு சந்தையில் ஒரு பெரிய அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது.