இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் ஃபேஸ்லிபட் மாடல்கள் என்னென்ன?
வரும் மாதங்களில் டாடா, கியா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கின்றன. என்னென்ன மாடல்கள்? எப்போது? டாடா நெக்ஸான்: கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா காட்சிப்படுத்திய கர்வ் கான்செப்ட் மாடலின் டிசைன்களை நெக்ஸானின் புதிய ஃபேஸ்லிப்டில் டாடா பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. வெளிப்பக்கமும், உள்பக்கமும் புதிய டிசைன் மற்றும் புதிய வசதிகளை கொடுக்கப்படவிருக்கின்றன. முக்கியமாக கூடுதலாக ஒரு இன்ஜின் ஆப்ஷனை கொடுக்கவிருக்கிறது டாடா. ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது புதிய நெக்ஸான். ஹூண்டாய் க்ரெட்டா: இந்தியாவிற்கான புதிய ஃபேஸ்லிப்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் ஹூண்டாய் வெளியிடும் எனத் தெரிகிறது. புதிய வசதிகள், புதிய டிசைனுடன், அதிக பவர் கொண்ட இன்ஜின் ஒன்றும் கொடுக்கப்படவிருக்கிறதாம்.
டாடா ஹேரியர்:
முன்பக்கமும், பின்பக்கமும் முழுமையான மாற்றங்களைச் சந்திக்கவிருக்கின்றன. தற்போது தான் ஹேரியருக்கு புதிய வசதிகளை அளித்தது டாடா. மேலும் புதிய வசதிகளுடன் ஃபேஸ்லிப்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக புதிய இன்ஜின் ஒன்றுடன் அக்டோபரில் களமிறங்குகிறது இந்த ஃபேஸ்லிப்ட். கியா சோனெட்: கடந்த இரண்டு வருடங்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையில் இருந்து வருகிறது சோனெட். புதிய டிசைனுடன் தற்போது அதனை வெளிநாடுகளில் சோதனை செய்து வருகிறது கியா. இன்ஜினில் எந்த மாற்றங்களும் இன்றி வெறும் காஸ்மெடிக் அப்டேட்களுடன் டிசம்பரில் வெளியாகிறது சோனெட் ஃபேஸ்லிப்ட். டாடா சஃபாரி: ஹேரிருக்கு கொடுக்கும் அத்தனை அப்டேட்களையும் சஃபாரிக்கும் கொடுக்கவிருக்கிறது டாடா, டிசனைத் தவிர. தனக்கே உரிய டிசைனுடன் ஹேரியருடன் சேர்ந்தே வெளியாகவிருக்கிறது சஃபாரி ஃபேஸ்லிப்ட்.