
மேம்பட்ட அம்சங்களுடன் டிவிஎஸ் மோட்டார் புதிய XL100 HD அலாய் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிகவும் பிரபலமான மொபெட் மாடலான XL100இன் புதிய வெர்ஷனை, டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய XL100 HD அலாய் மாடலின் விலை ₹65,047 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல், அதன் பாரம்பரிய உறுதியுடன் நவீன அம்சங்களை இணைத்து, தினசரி பயணங்களுக்கு மிகவும் ஸ்டைலான, நடைமுறைக்கு உகந்த மற்றும் திறமையான அனுபவத்தை வழங்குகிறது. புதிய XL100 HD அலாய் மொபெட் இப்போது 16-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களுடன் வருகிறது. இது அதிக பாதுகாப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை உறுதி செய்கிறது. புதிய LED ஹெட்லேம்ப், இரவில் சிறந்த பார்வையை வழங்குகிறது. மேலும், புதிய கிராபிக்ஸ் மற்றும் முழு கருப்பு நிற மஃப்லர், இதற்கு நவீன தோற்றத்தை அளிக்கிறது.
முக்கிய அம்சங்கள்
மாடலின் முக்கிய அம்சங்கள்
பயனர்களின் வசதிக்காக, இதில் மொபைல் சார்ஜிங் போர்ட், கூடுதல் பொருட்களை வைக்க கழற்றக்கூடிய இருக்கை மற்றும் விசாலமான ஃபுளோர்போர்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன இந்த மொபெட், ETFi (Eco Thrust Fuel Injection) தொழில்நுட்பத்துடன் கூடிய 99.7சிசி ஃபியூல்-இன்ஜெக்டட் என்ஜினை கொண்டுள்ளது. இது 15% அதிக மைலேஜை வழங்குகிறது. பாதுகாப்புக்காக, கீழே விழும்போது மூன்று வினாடிகளில் தானாகவே என்ஜினை அணைக்கும் டில்ட் சென்சார் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 89 கிலோ எடையுள்ள இந்த மொபெட், 150 கிலோ பேலோட் திறனை கொண்டது. இது தனிப்பட்ட மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கு ஏற்றது. இந்த புதிய மாடல் இரு சக்கர வாகனம், சிவப்பு, நீலம் மற்றும் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.