
இந்தியாவில் வெளியானது டிவிஎஸ்ஸின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 'எக்ஸ்' (X)
செய்தி முன்னோட்டம்
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வருடாந்திர ஆட்டோமொபைல் நிகழ்வான ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்த க்ரையான் கான்செப்ட் மாடலின் டிசனைப் போலவே வடிவமைக்கப்பட்ட, எக்ஸ் (X) எனப் பெயரிடப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ்.
டிவிஎஸ் XLETON பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, ஒரு மேக்ஸி ஸ்கூட்டர் பார்மெட்டில் உருவாக்கியிருக்கிறது டிவிஎஸ்.
ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய 10/25-இன்ச் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவிலேயே வாகனம் பயன்பாட்டில் இல்லாத போது, வீடியோக்களை பார்ப்பது மற்றும் கேம் விளையாடுவது உள்ளிட்ட செயல்பாடுகளைச் செய்ய முடியுமாம்.
டிவிஎஸ்
டிவிஎஸ் எக்ஸ்: எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி மற்றும் விலை
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 11kW பவர் மற்றும் 40Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 105கிமீ.
இத்துடன் 4.4kWh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. வீட்டிலேயே பொருத்தப்படும் ஹோம் சார்ஜரின் உதவியுடன் 0-50% பேட்டரியை 50 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடிகிறது. 950W போர்டபிள் சார்ஜர் மூலம், 4.30 மணி நேரத்தில் 80% வரை சார்ஜ் செய்ய முடியுமாம்.
இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சிங்கள் சேனல் ஏபிஎஸ் வசதியும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
FAME-II மானியத்துக்குள் அடங்காமல், இந்தியாவில் ரூ.2.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில், மிகவும் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகமாகியிருக்கிறது இந்த டிவிஎஸ் எக்ஸ்.