மைலேஜில் மற்ற கார்களை அலறவிடும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் அறிமுகம்!
டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடல் மாடலின் CNG வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அர்பன் ஹைரைடல் கார் CNG மாடல் S மற்றும் G என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புது அர்பன் குரூயிசர் CNG மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 23 ஆயிரம் ஆகும். அதுவே டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயித்துள்ளனர். இந்த டொயோட்டா ஹைரைடர் CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் உள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இந்தியாவில் அறிமுகம்
இந்த மோட்டார் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. லிட்டருக்கு 26.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும், CNG மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 6 ஏர்பேக், 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. குரூயிஸ் கண்ட்ரோல், டொயோட்டா i-கனெக்ட், ஆட்டோ-ஃபோல்டிங் ORVM-கள், ஆட்டோ டிம்மிங் IRVM, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் உள்ளன. மாருதி காருக்கு போட்டி இந்த கார் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி போட்டியாக உள்ளது. இதுமட்டுமன்றி, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்களுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.