டொயோட்டாவின், கிர்லோஸ்கர் மோட்டாரில் மீண்டும் வாடிக்கையாளர் தரவு மீறல்
டொயோட்டா மோட்டரின் இந்திய யூனிட்டான, கிர்லோஸ்கர் மோட்டாரில், டேட்டா ப்ரீச் நடந்துள்ளதாக, அந்நிறுவனம் புகார் அளித்துள்ளது. நேற்று அளிக்கப்பட்ட புகாரின் படி, ஊடுருவலின் அளவு மதிப்பீடு செய்யப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமீறல், அதன் சேவை வழங்குநர்களில் ஒருவரால் எச்சரிக்கப்பட்ட பின்னர், கண்டறியப்பட்டதுள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின், தனிப்பட்ட தரவுகளில் சிலவற்றை இழந்திருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள CERT-In (இந்திய கணினி அவசர பதில் குழு)க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த சம்பவத்தின் தொடர்ச்சி தான் தரவு மீறல்
"இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு, TKM , அதன் சேவை வழங்குனருடன் இணைந்து, தற்போது பின்பற்றப்பட்டு வரும் விரிவான வழிகாட்டுதல்களை, மேலும் மேம்படுத்தும். மற்றும் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அசௌகரியத்தையும் தவிர்க்க, முழு அர்ப்பணிப்புடன் உள்ளது" என்று நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதே போன்றொரு சம்பவம், சென்ற அக்டோபர் மாதத்திலும் நிகழ்ந்தது. டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனம், அதன் டி-கனெக்ட் சேவையில் இருந்த வாடிக்கையாளர்கள் தொடர்பான சுமார் 296,000 தகவல்கள், லீக் ஆகி இருக்க கூடும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.