
ஜிஎஸ்டி குறைப்பின் முழு பலனும் வாடிக்கையாளர்களுக்குதான்; டொயோட்டா கார்கள் விலை அதிரடி குறைப்பு
செய்தி முன்னோட்டம்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம், தனது வாகனங்களின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. அண்மையில், ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அதன் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பில், மிகவும் பிரபலமான ஃபார்ச்சூனர் கார் ₹3.49 லட்சம் வரையிலும், அதைத் தொடர்ந்து லெஜண்டர் ₹3.34 லட்சம் வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஹைலக்ஸ் பிக்கப் வாகனத்தின் விலையும் ₹2.52 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரீமியம் ரக கார்களான வெல்ஃபயர் மற்றும் கேம்ரி ஆகியவற்றின் விலைகள் முறையே ₹2.78 லட்சம் மற்றும் ₹1.01 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன.
இன்னோவா
இன்னோவா கார்கள்
நடுத்தர ரகத்தில், இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைக்ராஸ் ஆகியவற்றின் விலைகள் முறையே ₹1.80 லட்சம் மற்றும் ₹1.15 லட்சம் வரை குறைந்துள்ளன. சிறிய ரக கார்களான க்ளான்சா மற்றும் ரூமியோன் ஆகியவற்றின் விலைகள் முறையே ₹85,300 மற்றும் ₹48,700 வரை குறைந்துள்ளன. பிரபலமான அர்பன் க்ரூஸர் ஹைக்ராடரின் விலையும் ₹65,400 வரை குறைந்துள்ளது. வாகன வகையைப் பொறுத்து விலைக் குறைப்பின் அளவு மாறுபடும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் சரியான விலையை உறுதி செய்துகொள்ளுமாறு டொயோட்டா அறிவுறுத்தியுள்ளது. இந்த விலை குறைப்புகள், பண்டிகைக் காலத்தில் அனைத்து ரக கார்களின் விற்பனையை அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.