Page Loader
அதிகமான கார்களை மொத்த விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது டொயோட்டா 

அதிகமான கார்களை மொத்த விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது டொயோட்டா 

எழுதியவர் Sindhuja SM
Mar 01, 2024
03:31 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, இந்த பிப்ரவரியில் இந்தியாவில் மட்டும் விற்ற கார்களின் எண்ணிக்கை 61% அதிகரித்துள்ளது. அதாவது , டொயோட்டா 25,220 யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இன்னோவா கிரிஸ்டா, இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுடன் SUVகள் மற்றும் MPVகளுக்கு இந்தியாவில் அதிக தேவை இருந்து வருகிறது. அதன் காரணமாக டொயோட்டாவின் கார் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய விற்பனை-சேவை-பயன்படுத்தப்பட்ட கார் வணிகத்தின் துணைத் தலைவர் சபரி மனோகர், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

டொயோட்டா

ஜனவரி மாதத்தில் 24,609 யூனிட்களை விற்பனை செய்த டொயோட்டா

இந்த பிப்ரவரியில் மட்டும் டொயோட்டா உள்நாட்டில் 23,300 யூனிட்களை விற்பனை செய்து, 1,920 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 24,609 யூனிட்களை விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் SUV மற்றும் MPV களுக்கான வளர்ந்து வரும் தேவையை சுட்டிக்காட்டிய மனோகர், ஆட்டோமொபைலின் இந்த வளர்ச்சிக்கு காரணமே தங்கள் நிறுவனம் தான் என்று கூறினார். நவம்பர் 2022 இல் இன்னோவா ஹைக்ராஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 50,000-யூனிட் விற்பனை மைல்கல்லை அந்த வாகனம் எட்டியுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் ஐகானிக் இன்னோவா கிரிஸ்டா மாடலுடனான வடிவமைப்பு வேறுபாடுகளையும் அவர் எடுத்துரைத்தார்.