Page Loader
டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு!
டெயோட்டாவின் Hilux Pickup SUV காரின் விலை குறைப்பு

டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு!

எழுதியவர் Siranjeevi
Mar 18, 2023
07:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் கார் விற்பனை நிறுவனமான டொயோட்டா அதன் Pickup SUV காரான Hilux SUV விலையை 3.59 லட்சம் ரூபாய் அதிரடியாக குறைத்துள்ளது. அமெரிக்கா நாடுகளில் பிரபலம் வாய்ந்த Pick Up டிரக்குகள் SUV கார்கள் போன்று பெரியதாக இருக்கும். இந்த வகை டிரக்குகள் இந்தியாவில் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. இதற்கு முன் Toyota நிறுவனம் கடந்த ஆண்டு இந்த Hilux Pickup SUV காரை அறிமுகம் செய்தது. இந்த டிரக்கின் விலை தான் இப்போது 3.59 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு 30.40 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஆனால், அதே நேரம் அதன் டாப் வேரியண்ட் மாடல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்டாண்டர்ட் மாடல் விலை குறைக்கப்பட்டாலும் வசதிகள் எதுவும் நீக்கப்படவில்லை.

டெயோட்டா கார்

டொயோட்டாவின் Hilux Pickup SUV காரின் விலையை குறைத்துள்ளது

இந்த அற்புத காரில் நமக்கு 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட், ஆப்பிள் கார் பிலே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், பின்பக்க AC வென்ட்ஸ், கிருஸ் கண்ட்ரோல், ஸ்டேரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. இதில் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் உள்ளது. அதிகபட்சமாக 201BHP பவர் மற்றும் 500 NM டார்க் வசதி உள்ளது. இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் வசதிகள் உள்ளன. கூடுதல் சிறப்பாக இந்த கார் 700mm தண்ணீரில் கூட செல்லும் அளவிற்கு மிகவும் திறன் கொண்டது. இந்த காரின் விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளதால் இதன் விற்பனை அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது