செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் செய்வது எப்படி? செம்ம வருமானம்
இந்திய வாகன சந்தையில் கார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் தங்களின் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனிடையே, Second Handed கார் பிசினஸ் எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இந்தியாவில் பயன்படுத்திய கார்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. 2019இல் பயன்படுத்திய கார்களுக்கான சந்தை மதிப்பு 24.24 பில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 2020 முதல் 2025-க்குள் 15.12 சதவீதம் வரை அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது. எனவே, உங்களிடம் தேவைக்கு ஏற்ற நிதி இருந்தால், உடனடியாக துவங்கிவிடலாம்.
செகண்ட் ஹேண்ட் கார் பிசினஸ் - செய்வது எப்படி என இங்கே பார்ப்போம்.
ஒருவேளை கடன் தேவைப்படும் பட்சத்தில் வங்கிகளில் வங்கி மற்றும் பிரபலமான நிதி நிறுவனக்களில் லோன் எடுத்தும் பயன்படுத்திய கார் ஷோரூம் திறக்கலாம். தொடர்ந்து, நிறுவனத்தை துவங்குவதற்கு தேவைப்படும் சட்டப்பூர்வ அனுமதிக் பெறுவதற்கான கட்டணங்கள். இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுப்படும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன் செய்யலாம். இந்த துறையில் இறங்குவதற்கு இத்துறையில் அனுபவம் உங்களுக்கு இருந்தால் மிகவும் சிறந்தது. மேலும், இப்பிரிவில் கைதேர்ந்த ஒரு சிறிய அளவிலான ஊழியர்கள் கூட்டத்தை சேர்ப்பது நல்லது. இதில் விருப்பம் இல்லாத பட்சத்தில் சில வருடம் SecondHanded Car Business-ல் இருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் பணியாற்றி அதன் வியூகங்களை தெரிந்துகொண்டு இறங்குவது சிறந்தது.