
இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
இந்திய வாகனசந்தையில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அதிலும் முழு அளவிலான SUVகள் மற்றும் ஹைப்ரிட் MPV வரை புது புது வாகனங்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், மார்ச் மாதத்தில் சில கார்கள் வெளியாகின்றன. அவை என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
ஹூண்டாய் வெர்னா கார் 12 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் வெளியாக உள்ளது. இந்த கார் மார்ச் 21 இல் வெளி வருகிறது.
ஹூண்டாய் வெர்னா காரின் நான்கு எஞ்சின்களுமே மிகச் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குகிறது. லிட்டருக்கு 15.92 கிமீ மைலேஜையும் வழங்கும்.
அடுத்து, ஹோண்டா சிட்டி, இந்த கார் மார்ச் 2இல் வெளியாகிறது.
கார்கள்
மார்ச் 2023 இல் வெளியாகும் அசத்தலான கார்கள் - இங்கே
இதில் இது 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் (119.35hp/145Nm) மற்றும் 1.5-லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றிலிருந்து ஆற்றலைப் பெறும்.
2023 Hyundai ALCAZAR, தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்தியாவில் 2023 அல்காசர் ஆர்டரை திறந்துள்ளது .
இந்த காரில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினிற்கு பதிலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாருதி தனது ஃபிராங்க்ஸ் காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது.
இந்த காரில் 5 வேரியன்ட்கள் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் விலையை மாருதி நிறுவனம் இந்த மார்ச் மாதம் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.