அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விட எரிபொருள் வாகனங்களையே அதிகம் விரும்புகிறார்கள்.
அதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, எலெக்ட்ரிக் வாகனங்களைப் பற்றி முழுமையாகத் தெரியாதது மற்றும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கான போதுமான கட்டமைப்புகள் இல்லாதது.
ஆனால், சமீக காலமாக இந்த தடைகளைக் கடந்து பல்வேறு வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்க முன்வருகிறார்கள். அதற்கேற்ற வகையில், கார் தயாரிப்பு நிறுவனங்ளும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் அடுத்த வெளியாகும் எலெக்ட்ரிக் கார்கள் என்னென்ன?
48kWh பேட்டரி மற்றும் 400 கிமீ ரேஞ்சுடன் மாருதி சுஸூகியின் புதிய எலெக்ட்ரிக் காராக அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகவிருக்கிறது eVX எலெக்ட்ரிக் கார் மாடல்.
எலெக்ட்ரிக் கார்
அடுத்து வெளியாகும் எலெக்ட்ரிக் கார்கள்:
இந்தியாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் மிட்சைஸ் எஸ்யூவியான க்ரெட்டாவின் எலெக்ட்ரிக் வடிவத்தை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஹூண்டாய்.
தங்களுடைய டிகோர் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்ட அதே எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி கான்பிகரேஷனை, புதிய பன்ச் எலெக்ட்ரிக் கார் மாடலிலும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது டாடா. அடுத்த சில வாரங்களில் இந்தப் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
டாடா மோட்டார்ஸின் புதிய ஜென் 2 பிளாட்ஃபார்மின் உருவாக்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் வாகனமாக இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது கர்வ் EV. சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களில் கொடுக்கப்பட்ட வசதிகளை இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரிலும் நாம் எதிர்பார்க்கலாம்.
XUV.e8 மற்றும் BE.05 ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.