இந்தியாவில் 2023-ல் வெளியான 500சிசிக்கு உட்பட்ட பைக்குகள்
இந்தியாவில் இந்த 2023ம் ஆண்டு பல்வேறு புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 500சிசிக்கு உட்பட்ட இன்ஜின் திறனைக் கொண்டு வெளியான சிறந்த பைக்குகள் அடங்கிய தொகுப்பு இது. நியோ ரெட்ரோ தோற்றத்துடன் ரூ.2.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில், 398சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன் வெளியானது ட்ரையம்ப் ஸ்பீடு 400. 39.4hp பவர் மற்றும் 37.5 Nm டார்க்கை வெளிப்படுத்தும் இன்ஜினுடன், பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டு வெளியானது இந்த ப்ரீமியம் பைக். இந்திய பைக் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ்ஸின் அப்பாச்சி பைக் லைன்அப்பில், புதிய ஸ்ட்ரீட் நேக்கட் மாடலாக, ரூ.2.43 லட்சம் விலையில் வெளியானது டிவிஎஸ் அப்பாச்சி RTR 310.
இந்த ஆண்டு வெளியான பைக்குகள்:
ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்த ஹிமாலயன் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக, சற்று பெரிய இன்ஜினுடன் ரூ.2.69 லட்சம் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452. 47.6hp பவர் மற்றும் 43.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 457சிசி இன்ஜினுடன், இந்தப் பிரிவிலேயே அதிக திறனுடைய பைக்காக இந்தியாவில் ரூ.4.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகமானது புதிய ஏப்ரிலியா 457. இறுதியாக, கடந்த சில ஆண்டு காலமாகவே இந்திய பைக் பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா R3-யுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. 40.2hp பவர் மற்றும் 29.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 321சிசி இன்ஜினுடன், ரூ.4.65 லட்சம் விலையில் வெளியானது R3. இந்தப் பட்டியலிலேயே மிகவும் விலையுயர்ந்த பைக்கும் இதுதான்.