Page Loader
62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை!
62 வயது மூதாட்டி விமானத்தில் செல்லும் வைரல் வீடியோ

62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை!

எழுதியவர் Siranjeevi
Mar 09, 2023
03:06 pm

செய்தி முன்னோட்டம்

தெலங்கானாவைச் சேர்ந்தவர் மில்குரி கங்கவ்வா 62 வயதான இவர் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கிராமப்புற வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் யூடியூப் சேனலான "மை வில்லேஜ் ஷோ" வின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், அதன் மூலம் முதல் முறையாக விமானத்தில் சென்றுள்ளார். அதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், உற்சாகமும் பதட்டமும் கலந்து விமானத்திற்குள் நுழைந்துள்ளார். விமானத்தின் சுற்றுப்புறங்களைப் பார்த்து வியந்தார். தொடர்ந்து இருக்கை பெல்ட்டுடன் போராடியுள்ளார். உயரத்தை கண்டு பயந்துள்ளார். தனது காதுகள் வலிப்பதையும் வெளிக்காட்டியுள்ளார். அவரது முதல் விமானம் மறக்கமுடியாத ஒன்றாக இருக்குமென வீடியோவின் முடிவில் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. இதற்கு பலர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

62 வயதில் விமானத்தில் சென்ற முதியவரின் வைரல் வீடியோ