Loading...
ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி! நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் சலுகை
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் சலுகை அறிவிப்பு

ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி! நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் சலுகை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2026
04:59 pm

செய்தி முன்னோட்டம்

நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை காலத்தையொட்டி புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கு பிரம்மாண்ட தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பிரபல மாடல்களுக்கு ரூ.3.35 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. டியாகோ, நெக்ஸான், கர்வ், ஹேரியர் மற்றும் பஞ்ச் இவி உள்ளிட்ட முன்னணி கார்கள் இந்த சலுகை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

எலக்ட்ரிக் கார்

மின்சார வாகனப் பிரிவில் அள்ளிக்கொடுக்கும் டாடா

டாடா மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் கார்களுக்கு மிக அதிக அளவிலான தள்ளுபடிகளை ஒதுக்கியுள்ளது.

புதிய கர்வ் மாடல் எலக்ட்ரிக் காரின் குறிப்பிட்ட ரகங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3.35 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கின்றன.

அதேபோல் பன்ச் எலக்ட்ரிக் மாடலின் லாங் ரேஞ்ச் வேரியண்ட்டிற்கு ரூ.1.45 லட்சம் வரையிலும், ஹேரியர் எலக்ட்ரிக் ஃபியர்லெஸ் வேரியண்ட்டிற்கு ரூ.2.75 லட்சம் வரையிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் நெக்ஸான் எலக்ட்ரிக் காரிற்கு ரூ.45,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் கார்கள்

ஐசிஇ பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி கார்களுக்கான சலுகைகள்

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட நெக்ஸான் ஐசிஇ மாடலுக்கு ரூ.75,000 வரையிலும், சிஎன்ஜி ரகத்திற்கு ரூ.60,000 வரையிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஆல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்டிற்கு ரூ.55,000 வரையிலும், டியாகோ மற்றும் டிகோர் கார்களுக்கு முறையே ரூ.35,000 மற்றும் ரூ.30,000 வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

மேலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியரா ஐசிஇ மாடலுக்கு ரூ.30,000 வரையிலும், கர்வ் ஐசிஇ மாடலுக்கு ரூ.1.25 லட்சம் வரையிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

சலுகைகள்

எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் லாயல்டி சலுகைகள் விவரம்

இந்த பண்டிகை கால ஆஃபர்களில் வாடிக்கையாளர் தள்ளுபடி, பழைய வாகனப் பரிமாற்ற போனஸ், ஸ்கிராப்பேஜ் சலுகை மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், டாடா ஏரிஸ் மற்றும் பஞ்ச் ஐசிஇ மாடல்களுக்கு இந்த மாதம் எந்த சலுகைகளும் பட்டியலிடப்படவில்லை.

இந்த சலுகைகள் நகரம், ஷோரூம் மற்றும் வாகன இருப்புக்கு ஏற்ப மாறுபடலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள டாடா ஷோரூம்களை அணுகி விவரங்களை அறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT