விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா நிறுவனம் - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள்
இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்களிண் எண்ணிக்கை பற்றி வெளியிட்டுள்ளது. கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசுகி அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் உள்ளது. இவர்களுக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே மார்ச் மாதத்தில் கார்களின் விற்பனையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹூண்டாய் நிறுவனம் 50,600 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால், டாடா மோட்டார்ஸால் 44,044 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. எனவே இந்த விற்பனை ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டு காட்டிலும் அதிகமாகும். 1,500க்கும் அதிகமான கார்களை இந்த ஆண்டு விற்பனை செய்துள்ளது.
மார்ச் மாத கார் விற்பனையில் புதிய உச்சத்தை எட்டிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 44 ஆயிரம் கார்களில் 6,509 எலக்ட்ரிக் கார்களும் அடங்கும். இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மெல்ல மெல்ல விற்பனையில் அதிகரித்து வருகிறது. சராசரியாக 3 மாதத்தில் 16,000 கார்கள் விற்பனை என்றால், ஒரு மாதத்திற்கு 5,000க்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. இந்த அளவிற்கு வேறு எந்த நிறுவனமுன் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தது கிடையாது.