விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிக்கள்
தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு கார் தயாரிப்பாளர்களும் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கிறார்கள். அப்படி இந்த விழாக்காலத்தில் அதிக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அளிக்கப்பட்ட எஸ்யூவிக்களின் பட்டியல் இது. இந்தியாவில் ரூ.33.40 லட்சம் தொடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டீசல் இன்ஜின் மெரிடியன் மாடலுக்கு, ரூ.1.30 லட்சம் வரை விழாக்கால சலுகைகளை அறிவித்திருக்கிறது ஜீப் நிறுவனம். அதேபோல், இந்தியாவில் ரூ.20.49 லட்சம் தொடக்க விலையில் தாங்கள் விற்பனை செய்து வரும் மற்றொரு மாடலான காம்ஸூக்கு ரூ.1.50 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்திருக்கிறது ஜீப். இந்த மாடலில் டர்போசார்ஜூடு டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சலுகைகள் வழங்கப்பட்ட எஸ்யூவிக்கள்:
இந்தியாவில் ரூ.10.89 லட்சம் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலையில் விற்பனையாகி வரும், இரண்டு டர்போசார்ஜூடு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட தங்களுடைய குஷாக் மாடலுக்கு ரூ.1.50 லட்சம் வரை சலுகைகள் அளித்திருக்கிறது ஸ்கோடா. அதேபோல், ப்ரீமியமான எஸ்யூவியாக விற்பனையாகி வரும் டீசல் இன்ஜின் கொண்ட C5 ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ.2 லட்சம் வரை சலுகை வழங்கியிருக்கிறது சிட்ரன். இந்த மாடலானது இந்தியாவில் ரூ.37.67 லட்சம் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ரூ.15.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய எலெக்ட்ரிக் எஸ்யூவியான XUV400 மாடலுக்கு ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது மஹிந்திரா.