Page Loader
யமுனா நெடுஞ்சாலையில் புதிய வேக வரம்பு அமல்
யமுனா நெடுஞ்சாலையில் நேற்று முதல் புதிய வேக வரம்பு

யமுனா நெடுஞ்சாலையில் புதிய வேக வரம்பு அமல்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 17, 2022
11:41 pm

செய்தி முன்னோட்டம்

புது டெல்லி- ஆக்ரா இடையே அமைந்துள்ள, 6 வழி யமுனா நெடுஞ்சாலை, 165.5 கிமீ தூரம் கொண்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு, இந்த பாலம் கட்டப்பட்டது. உ.பி மாநிலத்தில் நிலவும் கடும் குளிரால், பகலிலேயே மூடுபனி ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அது இன்னும் அடர்த்தியடைந்து, மோசமடைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுதி சிரமத்துக்கு ஆளாகின்றனர். பல நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல்களும், உயிருக்கு ஆபத்தான விபத்துகளும் ஏற்படுகின்றது. இதனை தடுக்க, போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஒரு புதிய விதியை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி, இலகுரக வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு மணிக்கு 80 கிமீ ஆகவும், கனரக வாகனங்களுக்கு மணிக்கு 60 கிமீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

யமுனா நெடுஞ்சாலை

இந்த வேகத்தடை நேற்று முதல் (டிசம்பர் 15 ) அமலாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகவரம்பை மீறுபவர்களுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் (YEIDA) அறிக்கைப்படி, அந்த நெடுஞ்சாலையில் ஏற்படும் 19% விபத்துக்கள், அதிவேகம் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக ஏற்படுகின்றன. அமல்படுத்தப்பட்ட புதிய வேகதடையை கண்காணிக்க, சாலையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அதே அறிக்கையில்,கிட்டத்தட்ட 45% விபத்துக்கள், ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும், தூக்க கலக்கத்தில் ஓட்டுவதாலும் நிகழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க, ஓட்டுனர்களுக்கு தேநீர் வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு சுங்கச்சாவடிகளுக்கு அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.