
குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் எலிகன்ஸ் எடிஷன்களை வெளியிட்ட ஸ்கோடா
செய்தி முன்னோட்டம்
ஸ்கோடா நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் குஷாக் எஸ்யூவி மற்றும் ஸ்லாவியா செடான் மாடல்களின் எலிகன்ஸ் (Elegance) எடிஷன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
முழுவதும் கருமை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் எலிகன்ஸ் எடிஷன்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது ஸ்கோடா நிறுவனம்.
வெளிப்புறம் கருமை நிறத்துடன், கிரில், டெயில்கேட் மற்றும் ரூஃப்ரெயில் உள்ளிட்டவற்றில் குரோமியத்தைச் சேர்ந்திருப்பது அவற்றுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கிறது.
ஸ்பெஷல் எடிஷன் கார்கள் என்பதைக் குறிக்கும் விதமாக, இரண்டு மாடல்களின் B-பில்லர்களிலும் எலிகன்ஸ் பேட்ச்சைக் கொடுத்திருக்கிறது ஸ்கோடா.
ஸ்கோடா
ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா எலிகன்ஸ் எடிஷன்: விலை
அலங்கார மாற்றங்களைத் தவிர சாதாரண மாடல்களை விடக் கூடுதல் வசதிகள் எதுவும் இருந்து இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் அளிக்கப்பவில்லை.
இரு மாடல்களின் எலிகன்ஸ் எடிஷன்களிலுமே 150hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் ரூ.18.31 லட்சம் முதல் ரூ.19.51 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளி குஷாக் எலிகன்ஸ் எடிஷன் மாடல்களையும், ரூ.17.52 லட்சம் முதல் ரூ.18.92 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் ஸ்லாவியா எலிகன்ஸ் எடிஷன் மாடல்களையும் வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா.