குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 3
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம். வாகனஓட்டிகளுக்கு மிகவும் சோதனையான விஷயம் இந்த பனிமூட்டம் தான். எதிர்வரும் வாகனங்களோ, ரோடுகளோ, சரிவர தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிறைந்துள்ளது. இதனால் பல விபத்துகள் நேர்கிறது. குறிப்பாக இந்தியாவின் பல தென் மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பாதுகாப்பாக எப்படி வாகனத்தை ஓட்டுவது என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ
வைப்பர்கள் மற்றும் டிஃப்ரோஸ்டர்கள்
வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னர், உங்கள் காரின் விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் நன்றாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்யவும். அது வாகனம் ஓட்டும்போது, உங்கள் பார்வையை தெளிவாக வைத்திருக்க உதவும். மேலும், காருக்குலிருந்து இயக்கப்படும், கண்ணாடியின் உட்புறத்தில் மூடுபனி ஏற்படுவதைத் தவிர்க்கும் டிஃப்ராஸ்டர்களை கட்டாயம் பயன்படுத்தவும். இது மழைக்காலத்தின்போதும், பயன்படுத்தலாம்.
வேகத்தை குறைக்கவும்
பொதுவாகவே மித வேகம் மிக நன்று. அதிலும் பனிமூட்டமான நிலையில், திடீரென வளைவதையோ, நிறுத்துவதையோ தவிர்க்கவும். அதேபோல, மிகவும் வேகமாக வாகனம் ஓடக்கூடாது. நிதானமாக, முடிந்த வரை 20 - 30 கிமீ வேகத்தை கடைபிடிப்பதே சிறந்தது. விபத்துகளை தவிர்க்க, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே கிளம்புவதால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு மெதுவாகவும், நிதானமாகவும், பாதுகாப்பாகவும் சென்றடையலாம்.