குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 2
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம். வாகனஓட்டிகளுக்கு மிகவும் சோதனையான விஷயம் இந்த பனிமூட்டம் தான். எதிர்வரும் வாகனங்களோ, ரோடுகளோ, சரிவர தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிறைந்துள்ளது. இதனால் பல விபத்துகள் நேர்கிறது. குறிப்பாக இந்தியாவின் பல தென் மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பாதுகாப்பாக எப்படி வாகனத்தை ஓட்டுவது என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ:
ஹெட்லேம்ப்கள்
இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்க்கு மட்டுமல்ல இந்த ஹெட்லேம்ப்கள். பனிமூட்டமான நேரத்தில் நமக்கு பாதை தெரியாத நேரத்திலும், இந்த விளக்குகள் பயன்படுத்த வேண்டும். முதலாவதாக, ஹெட்லேம்ப்கள் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தில் மூடுபனி ஓரளவிற்கு விலகிவிடும். அதனால், முன்னால் இருக்கும் பாதை தெளிவாக தெரியும். எனினும், இந்த சூழலில் வெள்ளை LED ஹெட்லேம்ப்கள் மற்றும் உயர் பீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், அப்படி செய்தால், பனிமூட்டத்திற்கிடையே ஒளி சிதறிவிடும். மேலும், ஹெட்லேம்ப்களுடன், டெயில் லேம்ப்களும் சுவிட்ச் ஆன் செய்யப்பட வேண்டும். அது பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிகாட்டும் விளக்காகச் செயல்படும்.
பாதுகாப்பான இடைவெளி
டெயில் லாம்ப் உதவியுடன், உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். அதனால், அந்த விளக்கின் உதவியுடன், வாகனத்தின் தூரத்தை கணக்கிட்டு, பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிப்பது நல்லது. மேலும், முன்னோக்கி செல்லும் பாதையினையும், வளைவு நெளிவுகளையும் புரிந்துகொள்வதற்கும், இந்த பாதுகாப்பான தூரம் அவசியமாகிறது.