ஹிமாலயன் 411 மாடலின் விற்பனையை நிறுத்தும் ராயல் என்ஃபீல்டு
செய்தி முன்னோட்டம்
இந்த மாத இறுதிக்குள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையிலும், வெளிநாடுகளிலும் தங்களுடைய ஹிமாலயன் 411 மாடலின் விற்பனை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிறுத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஹிமாலயன் 411 மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
முக்கியமாக ஆஃப்ரோடிங் பைக் பிரிவில் முக்கியமான பைக்காக வலம் வருகிறது ஹிமாலயன் 411 மாடல். தற்போது இந்த ஹிமாலயன் 411 மாடலுக்கு மாற்றாக, சற்று பெரிய இன்ஜினைக் கொண்ட ஹிமாலயன் 452 மாடலை களமிறக்கத் திட்டமிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு.
ஆஃப்ரோடிங் பைக்கான ஹிமாலயன் மாடலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில புதிய மாற்றங்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனம்.
ராயல் என்ஃபீல்டு
ஹிமாலயன் 452-ல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள்:
சிறந்த ஆஃப்ரோடிங் பைக்காக விளங்கினாலும், நெடுஞ்சாலைகளில் சில கட்டுப்பாடுகள் ஹிமாலயன் 411 மாடலுக்கு இருந்தன. அதனைக் களைந்து நெடுஞ்சாலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையிலான புதிய இன்ஜினை 452 மாடலுக்குக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
40hp பவரை வெளிப்படுத்தக்கூடிய முற்றிலும் புதிய லிக்விட்-கூல்டு இன்ஜினை புதிய ஹிமாலயன் 452 மாடலில் பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
மேலும், ஆஃப்ரோடிங்குக்கு ஏற்ற வகையில் ஷோவா சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களுடன் கூடிய கிராஸ் ஸ்போக் வீல்களையும் புதிய ஹிமாலயன் 452-ல் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
411 இன்ஜினை விரும்புபவர்களுக்கு ஸ்கிராம் 411 மாடலை தொடர்ந்து விற்பனை செய்யவும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.