பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விற்பனை செய்ய 'Reown' திட்டத்தை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் மறுவிற்பனை நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு 'Reown' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இந்தத் திட்டத்தின் கீழ், நாம் பயன்படுத்திய ராயல் என்ஃபீஸ்டு பைக்குகளை விற்பனை செய்யவோ, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்கவோ அல்லது நம்முடைய பைக்கை பரிமாற்றம் செய்து கொள்ளவோ முடியும். பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் மீதான நம்பகத்தைன்மையை அதிகரிக்கவும், தங்கள் பைக்குகளை விற்பனை செய்யும் ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்களுக்கு அந்த செயல்முறையை எளிமைப்படுத்தவும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகள்:
இந்த சேவையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஷோரூம் மூலமாகவோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் (ஆன்லைன் மூலம் இந்தச் சேவையை அணுக இங்கே கிளிக் செய்யவும்). பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை மறுவிற்பனை செய்வதற்கு முன்னர் 200-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான மாற்றங்களை செய்த பிறகே விற்பனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்த செயல்முறைகளின் போது வாடிக்கையாளர்குளுக்குத் தேவையான கடனுதவிகளை வழங்க HDFC, IDFC மற்றும் ஸ்ரீராம் குழுமம் ஆகியவற்றுடன் கைகோர்த்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் பைக்குளின் மதிப்பை ஆய்வு செய்ய அட்ராய்ட் ஆட்டோவுடனும், பயன்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை கண்டறிய OLX நிறுவனத்துடனும் கைகோர்த்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.