LOADING...
உங்க பழைய புல்லட் இனி புது பெட்ரோலில் சீறும்! என்ஜின் பாதிப்பைத் தடுக்க ராயல் என்ஃபீல்டு கொண்டு வந்த மேஜிக் கிட்
E20 பெட்ரோலால் ஏற்படும் என்ஜின் பாதிப்பைத் தடுக்க ராயல் என்ஃபீல்டு கொண்டு வந்த மேஜிக் கிட்

உங்க பழைய புல்லட் இனி புது பெட்ரோலில் சீறும்! என்ஜின் பாதிப்பைத் தடுக்க ராயல் என்ஃபீல்டு கொண்டு வந்த மேஜிக் கிட்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2026
02:22 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோலை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது. இந்த எத்தனால் கலந்த எரிபொருள் ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதனால் BS3 மற்றும் BS4 ரக பழைய ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் என்ஜினில் உள்ள ரப்பர் சீல்கள், குழாய்கள் மற்றும் கார்ப்பரேட்டர் பாகங்கள் காலப்போக்கில் கடினமாகி அல்லது வெடிப்பு ஏற்பட்டு சேதமடைய வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது ஒரு புதிய தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

E20 கிட்

ராயல் என்ஃபீல்டு வழங்கும் E20 கிட்

கிளாசிக் 350, புல்லட் 350, எலக்ட்ரா மற்றும் தண்டர்பேர்ட் போன்ற பழைய மாடல் பைக்குகளுக்காகவே பிரத்யேகமான கார்ப்பரேட்டர் கிட்களை ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது: BS3 மாடல்கள்: இதற்கான கார்ப்பரேட்டர் கிட் விலை சுமார் ₹3,000. BS4 மாடல்கள்: இதற்கான கிட் விலை சுமார் ₹4,000. 500cc பைக்குகள் (Fuel-Injected): இதற்கான புதிய இன்ஜெக்டர்கள் சுமார் ₹2,500 விலையில் கிடைக்கின்றன. இந்தக் கருவிகளில் மேம்படுத்தப்பட்ட சீல்கள் மற்றும் உட்புற பாகங்கள் உள்ளதால், எத்தனால் கலந்த பெட்ரோலால் என்ஜின் பாதிக்கப்படாது.

மைலேஜ்

மைலேஜ் மற்றும் செயல்திறன்

எத்தனால் பெட்ரோலில் எரிசக்தி சற்று குறைவாக இருப்பதால், பழைய பைக்குகளில் இந்த கிட்டைப் பொருத்தும்போது மைலேஜ் லேசாகக் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், என்ஜின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், தேவையற்ற பழுதுகளைத் தவிர்க்கவும் இந்த மாற்றங்கள் மிகவும் அவசியம். தற்போது BS6 நிலை 1 மாடல்களுக்கு (650cc) இத்தகைய அப்டேட்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் தங்களது பழைய பைக்குகளுக்கு ஒரு எளிமையான வழியைப் பரிந்துரைக்கின்றன. எத்தனால் பெட்ரோலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க ஃபியூயல் சிஸ்டம் கிளீனர் திரவத்தைப் பயன்படுத்துமாறு கூறுகின்றனர். சுமார் ₹80 முதல் ₹100 வரை விற்கப்படும் இந்த 40 மிலி திரவத்தை பெட்ரோலுடன் கலப்பதன் மூலம் என்ஜின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

Advertisement