இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பைக்குகள் எவை?
நாளை இந்திய குடியரசுதின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், டெல்லி குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து, இண்டியா கேட் வரை செல்லும் ராஜ பாதையில், ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடைபெறும். அதில் ராணுவ வீரர்களில் சாகசங்களும் இடம்பெறும். குறிப்பாக பைக் மீது சாகசம் புரிவதுண்டு. அதுமட்டுமின்றி, ராணுவ தளவாடங்களுக்காகவும் பலவித பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. சரி, ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பைக்குகள் எவை என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ராயல் என்ஃபீல்டு: ஆரம்பகாலத்தில், ராயல் என்ஃபீல்டின் புல்லட் 350 பைக்கின் 4-ஸ்ட்ரோக் மாடல்கள் தான், இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. இதன் ஆற்றலும், காடுமேடுகளில் ஓடும் தன்மையும் இந்த பைக்கை பிரபலப்படுத்தியது. பெரும்பாலான பைக்குகள் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சென்னையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
ராணுவத்தினர் பயன்படுத்தும் பைக் வகைகள்
யமஹா: யமஹாவின் RD350 பைக்குகள் மிகவும் பிரபலமானவை. விலை அதிகமாக இருந்தாலும் சில காலம் இந்த RD 350 பைக்குகள் பயன்படுத்தப்பட்டன. ஜாவா: ராணுவத்தினர் ராயல் என்ஃபீல்டு பைக்கை பயன்படுத்திய அதே வேளையில், கடற்படையினர் ஜாவா பைக்குகளை பயன்படுத்தி வந்தனர். ஹிமாலயன்: ராணுவத்தில் எப்போதும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு டிமாண்ட் உண்டு. சமீபகாலங்களில், ராணுவத்தினர் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 பைக்குகளை வாங்கி பயன்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நவீன ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மலை பயணத்திற்கு சிறந்தவை.