ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள்
லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர்: அவர் லேண்ட் ரோவரை தனது வணிக சாம்ராஜ்யத்திற்குள் கொண்டு வரும் முன்பே, இந்த கார்-ஐ வாங்கிவிட்டார். நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் உள்ளது. பெராரி கலிபோர்னியா: இது ரத்தன் டாடாவின் பிரியமான கார் என அனைவரும் அறிந்ததே. இந்த இரண்டு-கதவு, 2 2 ஹார்ட்டாப் கன்வெர்டிபிள் தனித்துவமான வாகனத்தை இயக்கும் 4.3-லிட்டர் V8 இன்ஜின், அதன் கடுமையான செயல்திறனுக்காக பெயர்பெற்றது. டசால்ட் பால்கன் 2000 பிரைவேட் ஜெட்: டஸ்ஸால்ட் பால்கன் 2000 இன் உரிமையாளரான டாடா, அதை இயக்கும் தகுதியும் பெற்றவர். இந்த பால்கன், பிரெஞ்சு நிபுணர்களின் குழுவால் உருவாக்கப்பட்ட இரட்டை எஞ்சினைக் கொண்டுள்ளது.
ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்
கடலோர மும்பை சொகுசு பங்களா: ரத்தன் டாடாவின் கொலாபா இல்லம், மும்பை கடற்கரையில் உள்ளது. மிகவும் நேர்த்தியாக, கலைரசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு மாடிகள், 15,000 சதுர அடி, மேல் தளத்தில் ஒரு நீச்சல் குளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த வீட்டில், மற்றொரு நீச்சல் குளம், ஒரு சன் டெக், ஒரு ஹோம் தியேட்டர் அறை மற்றும் 10 வாகனங்களுகான பார்க்கிங் வசதி ஆகியவை அடங்கும். மசெராட்டி குவாட்ரோபோர்ட்: மசராட்டி குவாட்ரோபோர்ட் இத்தாலிய ஆடம்பர சின்னமாக கருதப்படுகிறது. ஸ்போர்ட்டி செடான் வகையை சேர்ந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கி.மீ. இந்த செடான் காரின் விலை சுமார் $100,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.