NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இரண்டு ஆண்டுகளில் 20 புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம்; ஓலா நிறுவனம் திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டு ஆண்டுகளில் 20 புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம்; ஓலா நிறுவனம் திட்டம்
    இரண்டு ஆண்டுகளில் 20 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த ஓலா முடிவு

    இரண்டு ஆண்டுகளில் 20 புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம்; ஓலா நிறுவனம் திட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 09, 2024
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 புதிய மின்சார வாகனங்களை வெவ்வேறு இரு மற்றும் மூன்று சக்கர வாகன வகைகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    நிறுவனத்தின் லட்சிய விரிவாக்க உத்தியானது ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தது ஒரு புதிய தயாரிப்பு வெளியீட்டை உள்ளடக்குகிறது.

    ஓலாவின் நடப்பு நிதியாண்டில் இரண்டாம் காலாண்டின் செயல்திறன் வெளிப்படுத்தும் போது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    இந்த காலாண்டின் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 38.5% அதிகரித்து ₹1,240 கோடியாக இருந்தது.

    அதன் தயாரிப்பு வெளியீட்டுத் திட்டங்களுடன், ஓலா எலக்ட்ரிக் தனது ஸ்டோர் நெட்வொர்க்கைப் பெருமளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

    கடைகள்

    கடைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டம்

    நிறுவனம் தனது கடைகளை 782 இல் இருந்து (செப்டம்பர் 2024 நிலவரப்படி) மார்ச் 2025க்குள் 2,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

    ஒவ்வொரு கடையும் ஒரு காலாண்டிற்கு சராசரியாக 130 விற்பனையை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொழில்துறை சராசரியை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகும். அதன் லட்சிய விரிவாக்கத் திட்டங்கள் இருந்தபோதிலும், ஓலா எலக்ட்ரிக் சில தடைகளை எதிர்கொண்டது.

    நிறுவனத்தின் பங்குகள் வெளியீட்டு விலையான ₹76 க்குக் கீழே வர்த்தகம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் நுகர்வோர் புகார்களின் அதிகரிப்பு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும், இந்த நுகர்வோர் கேள்விகளில் 99% சரியான நேரத்தில் தீர்க்கப்பட்டதாக ஓலா எலக்ட்ரிக் சமீபத்தில் கூறியது.

    சந்தை பங்கு

    ஓலா எலக்ட்ரிக்கின் சந்தைப் பங்கு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு

    ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 27%க்கு சரிந்துள்ளது.

    இருப்பினும், அக்டோபர் வெளியீட்டில், நிறுவனம் அதன் சந்தைப் பங்கு 30%க்கு மேல் திரும்பியதாகக் கூறியது.

    இரண்டாம் காலாண்டில் ஓலா எலக்ட்ரிக் 98,619 இரு சக்கர வாகனங்களை விநியோகித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 73.6% அதிகமாகும்.

    இது முக்கியமாக அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற எஸ்1 எக்ஸ் தொடரின் வெற்றியால் ஏற்பட்டது. அக்டோபரில், நிறுவனம் சுமார் 50,000 யூனிட் சில்லறை விற்பனையை அறிவித்தது.

    ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 75,000 முதல் ₹1.5 லட்சம் வரையிலான ஆறு மாடல்களுடன் கூடிய பரந்த அளவிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓலா
    மின்சார வாகனம்
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    எலக்ட்ரிக் பைக்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஓலா

    Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    மின்சார வாகனம்

    20% வளர்ச்சி; ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மீது அதிக ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள் ஓலா
    78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் TVS iQube கொண்டாட்ட பதிப்பு வெளியீடு டிவிஎஸ்
    இரு சக்கர வாகன சந்தையில் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது ஓலா எலக்ட்ரிக் ஓலா
    10,000 மின்சார வாகனங்களை வாங்க ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா ஒப்பந்தம் அமேசான்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    843 கிலோமீட்டர்கள் நீராவியை மட்டுமே உமிழும் புதிய ஹைட்ரஜன் ஏர் டாக்ஸி வாகனம்
    ஹைட்ரஜனில் இயங்கும் ஏர் டாக்ஸி தனது முதல் பயணத்தில் 840 கி.மீ கடந்தது ஆட்டோ
    இந்த நாட்டில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான EVகளை டெஸ்லா திரும்பப் பெறுகிறது டெஸ்லா
    FAME அபராதம் செலுத்திய EV தயாரிப்பாளர்கள் மீண்டும் மானியங்களைப் பெறலாம் எலக்ட்ரிக் பைக்

    எலக்ட்ரிக் பைக்

    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்? ராயல் என்ஃபீல்டு
    Splendor-க்கு போட்டியாக 135 KM செல்லும் Hop Oxo கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025