'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரியைத் தொடங்கியது ஓலா
செய்தி முன்னோட்டம்
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும், இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான ஓலா, தங்களுடைய 'S1 X+' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரியைத் துவக்கியிருக்கிறது.
ரூ.1.1 லட்சம் என்ற விலைப்பட்டிலைக் கொண்டிருந்தாலும், ஆண்டு இறுதித் தள்ளுபடியுடன் தற்போது ரூ.89,999 எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த S1 X+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஓலா.
சிங்கிள் சார்ஜில் 125 கிமீ வரை செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், எல்இடி முகப்பு விளக்கு, எல்இடி பின்பக்க விளக்கு, டெலஸ்கோபிக் முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் டூயல் ஷாக் பின்பக்க சஸ்பென்ஷன் ஆகிய வசதிகளை அளித்திருக்கிறது ஓலா.
ஓலா
ஓலா S1 X+ மாடலுக்குப் போட்டியாக விற்பனையில் இருக்கும் பிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்:
ரூ.1.18 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450S, ரூ.1.26 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹீரோ விடா V1, ரூ.1.45 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிம்பிள் ஒன் மற்றும் ரூ.1.56 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகியவை ஓலா S1 X+-க்கான போட்டியாளர்களாக இருக்கின்றன.
இவற்றில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே 203 என்ற அதிகபட்ச சிறந்த ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. பிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிட்டத்தட்ட S1 X+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சையே ஒத்திருக்கின்றன. ஏத்தர் 450S 115கிமீ ரேஞ்சையும், விடா V1 110கிமீ ரேஞ்சையும், டிவிஎஸ் ஐக்யூப் 100கிமீ ரேஞ்சையும் கொண்டிருக்கின்றன.