Loading...
2027-ல் களமிறங்கும் நார்டன் சூப்பர் பைக்குகள்: இந்தியாவில் Atlas GT மற்றும் 206bhp Manx R காப்புரிமை பதிவு
நார்டன் Atlas GT, Manx R பைக்குகளுக்கு இந்தியாவில் காப்புரிமை

2027-ல் களமிறங்கும் நார்டன் சூப்பர் பைக்குகள்: இந்தியாவில் Atlas GT மற்றும் 206bhp Manx R காப்புரிமை பதிவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2026
03:46 pm

செய்தி முன்னோட்டம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமான பிரிட்டிஷ் பிரீமியம் இரு சக்கர வாகன பிராண்டான நார்டன் (Norton), இந்தியாவில் தனது அட்லஸ் ஜிடி (Atlas GT) மற்றும் மேன்க்ஸ் ஆர் (Manx R) ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கான வடிவமைப்பு காப்புரிமையைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 2027 ஆம் ஆண்டில் இந்திய பிரீமியம் பைக் சந்தையில் நார்டன் தனது வலுவான தடத்தை பதிக்கத் தயாராகி வருவது தெரியவந்துள்ளது. எனினும் காப்புரிமை பதிவு மட்டுமே உடனடி வணிக வெளியீட்டை உறுதி செய்யாது என்றாலும், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரலல்-ட்வின் என்ஜின்

585cc பேரலல்-ட்வின் என்ஜின் கொண்ட நார்டன் Atlas GT ரோடு டூரர் சிறப்பம்சங்கள்

நார்டனின் அட்லஸ் அட்வென்ச்சர் தளத்தின் சாலைப் பயண பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ள Atlas GT, இரு புறமும் அலாய் சக்கரங்களைக் கொண்டுள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள 585cc லிக்விட்-கூல்டு பேரலல்-ட்வின் என்ஜின் 69bhp ஆற்றலையும் 57.5Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

மேலும் 15.4 லிட்டர் எரிபொருள் டேங்க், 220 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ், KYB முன்புற சஸ்பென்ஷன் மற்றும் புளூடூத், நேவிகேஷன், கோப்ரோ (GoPro) கட்டுப்பாடுகளுடன் கூடிய 8-இன்ச் TFT தொடுதிரை ஆகிய வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

சூப்பர்ஸ்போர்ட் பைக்

206bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1,200cc V4 நார்டன் Manx R சூப்பர்ஸ்போர்ட் பைக்

நார்டன் நிறுவனத்தின் முதன்மை சூப்பர்ஸ்போர்ட் மாடலான Manx R, 1,200cc 72-டிகிரி V4 என்ஜினுடன் 206bhp திறனையும் 130Nm டார்க்கையும் வழங்குகிறது.

இதில் 6-ஆக்சிஸ் IMU, வீலி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், பிரெம்போ ஹைபியூர் (Brembo Hypure) பிரேக்குகள் மற்றும் பைரெல்லி டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டாண்டர்ட், அபெக்ஸ், சிக்னேச்சர் மற்றும் உலகளவில் 150 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும் கார்பன்-ஃபைபர் கொண்ட ஃபர்ஸ்ட் எடிஷன் என நான்கு வேரியண்ட்களில் இது விற்பனைக்கு வருகிறது.

ADVERTISEMENT

ஓசூர் தொழிற்சாலை

ஓசூர் தொழிற்சாலை உற்பத்தியும் 2027 இந்திய வெளியீட்டுத் திட்டங்களும்

கடந்த 2020-ஆம் ஆண்டு நார்டன் நிறுவனத்தை கையகப்படுத்திய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அந்நிறுவனத்தில் பெரும் முதலீடுகளை செய்து வருகிறது.

கடந்த ஜூன் 2026 முதல் தமிழ்நாட்டின் ஓசூர் தொழிற்சாலையில் உலகளாவிய சந்தைக்கான அட்லஸ் மற்றும் அட்லஸ் ஜிடி பைக்குகளின் உற்பத்தியை டிவிஎஸ் தொடங்கியுள்ளது.

வரும் 2027 ஆம் ஆண்டில் இந்தப் பிரீமியம் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விலை மற்றும் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT